Admin Control Panel

New Post | Settings | Change Layout | Edit HTML | Moderate Comments | Sign Out

11.9.11

மொக்கைகள் – Mokkaikal

மொக்கைகள் – Mokkaikal

வாத்தியார்: ஏன்டா 15 நாளா பள்ளிக்கு வரலே?
மாணவன்: எங்க அப்பா ஒரே இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதை இருக்காதுன்னு சொல்லிருக்காரு சார்.


கணவன்: "நம்ம கஷ்டம் தீர சாமி எப்போதான் கண்ண திறப்பரோ?" (வேலைக்கு போகாத கணவனிடம்...)
மனைவி: "கவலையே படாதிங்க ஒரு நாளைக்கு மூணாவது கண்ண திறக்கத்தான் போறாரு"



"டாக்டர் என்னால வாய திறக்க முடியல.."
"சரி சரி உங்க மனைவிய வெளியில நிக்க சொல்லறேன்"


"எதுக்கு டாக்டர் மூச்ச இழுத்து விட சொல்றீங்க ?"
"இல்ல ஆபரேஷனுக்கு பிறகு மூச்சு விட முடியாது.."


"அந்த நோயாளிக்கு சொந்தகாரங்க யாரும் இல்லையா?"
"ஆமா டாக்டர் எல்லோருக்கும் நீங்க தான் ஆப்ரேஷன் பண்ணீங்க"  


"உங்களுக்கு தலைவலி இருக்கா?"
"தலைவலி வெளியில நிக்குது டாக்டர்"


"டாக்டர் என் புருஷன் ராத்திரி தூக்கத்துல பேசுறாரு"
"நீங்க அவர பகல்ல பேச விடுங்க சரியாயிடும்"


ஸ்கூல் டெஸ்ட்ல பிட்  அடிக்கலாம் ,
காலேஜ்ல டெஸ்ட்ல பிட்  அடிக்கலாம் ,
ப்ளட் டெஸ்ட்ல  பிட்  அடிக்க  முடியுமா? 



பல் வலி வந்தா பல்ல புடுங்கலாம் ஆனா, கால் வலி வந்தா கால புடுங்க முடியுமா ?



லஞ்ச் பேக்ல லஞ்ச் கொண்டு போக முடியும் ஆனா
ஸ்கூல் பேக்ல ஸ்கூல கொண்டு போக முடியுமா ?


நோயாளி: ஏன் நான் மருத்துவமனையில் இருக்கேன் ?
டாக்டர்: உங்களுக்கு ஒரு பஸ்சால விபத்து நடந்துருச்சி .
நோயாளி: அப்படியா ?
டாக்டர்: சரி, உங்களுக்கு ஒரு நல்ல மற்றும் ஒரு கெட்ட செய்தி இருக்கு. உங்களுக்கு முதல எதை சொல்லணும் ?
நோயாளி: முதல்ல கெட்ட செய்தி சொல்லுங்க .
டாக்டர்: உங்கள் கால்கள் மிகவும் மோசமாக இருக்கு, அதனால உங்க இரண்டு காலையும் எடுக்கணும்.
நோயாளி: அது பயங்கரமான செய்திதான் ! சரி நல்ல செய்தி என்ன?
டாக்டர்: எங்க ஆஸ்பத்ரில ஒரு கால் முழுசா எடுத்தீங்கனா, அடுத்த கால எடுக்க பாதி கட்டணந்தான்..



நோயாளி: டாக்டர் எனக்கு இரண்டு நாளா ஜலதோசமா இருக்கு.
டாக்டர்: சரி இரண்டு நாளைக்கு வீட்ல மூணு வேள நல்ல குளிர்ந்த தண்ணில குளிச்சிட்டு வாங்க.
நோயாளி: என்ன சொல்றீங்க ? அப்புறம் எனக்கு குளிர் காய்ச்சல் வந்துருமே!
டாக்டர்: பரவாஇல்ல.. எனக்கு ஜலதோசத்த விட குளிர் காய்ச்சல் எப்படி போக்கனுன்னும் தெரியும்.


"டாக்டர் நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் !!"
"பரவாஇல்ல என்னன்னு சொல்லுங்க"
"டாக்டர் இது உங்க கிளினிக்னு தெரியாம வந்துட்டேன்"


தொடர்புடைய பதிவுகள் :



Print