கொய்யாப்பழம்:
நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யப்பழமும் ஒன்று. கொய்யா பச்சைப்பசேலென்ற நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும். கொய்யா அனைவருக்கும் பிடிக்கும். இதற்கு ஜாம்பலா, கோவா(Gauva), பலாம்பர் என்ற பெயர்களும் உண்டு
கொய்யா மரங்கள் சுமார் 33 அடி உயரம் வரை வளரும் மரங்களாகும் கொய்யாவின் பச்சைப் பசேலென்ற இலைகள் நறுமணத்துடன் காணப்படும். விதையில்லாத கொய்யாப் பழங்களும் உள்ளன உஷ்ணப் பிரதேசங்களில் அதிகமாக விளையும் கொய்யாப்பழங்கள் நல்ல நறுமணம் மற்றும் இனிப்புச் சுவையுடன் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது.
ஆரஞ்சை விட அதிக அளவில் வைட்டமின் `சி' உள்ள பழம் கொய்யா. இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி ஆகிய சத்துக்களும் அதிகமாக காணப்படுகின்றன. வாழைப்பழத்தில் உள்ளதை விட கூடுதலாக பொட்டாசியம் சத்தும் உள்ளது.
பீட்டா கரோட்டின்(beta carotene), லைகோபீன்(lycopene - இளஞ்சிவப்பு பகுதி, புற ஊதா கதிர்களால் தோல் சேதம் ஏற்படுவதை தடுக்கிறது), லுடீன்(lutein) மற்றும் கிரிப்டாக்சாந்தின்(cryptoxanthin), வைட்டமின் A போன்ற antioxidant சத்துகள் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
Common Guava, per 165 g of individual fruit portion | ||||||||||||||||||||||||||||||||||||
|
- புண் ஆற்ற
- கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் .
- வயிறு நோய் நீங்க :
- கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை, மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன குடல், வயிறு அல்சர், பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.
- சர்க்கரை நோய் கட்டுபடுத்த :
- கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
- இருமலுக்கு :
- கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன.
- காய்ச்சல் கட்டுபடுத்த :
- கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
- மருத்துவ குணமுடைய இப்பழத்தின் இலைகளை வாயில் வைத்து மென்றால் பல்வலி ஓரளவுக்கு குறையும்
- கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு,காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.
- பிரசவ நச்சு அகற்ற :
- கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
- மலச்சிக்கல் தீர :
- மலச்சிக்கல்தான் நோயின் ஆரம்பம். அனைத்து நோய்களின் தாக்கமும் மலச்சிக்கலில் இருந்துதான் ஆரம்பிக்கும். மலச்சிக்கலைப் போக்கினாலே நோயில்லா நல்வாழ்வு வாழலாம் என்பது சித்தர்களின் கூற்று. நன்கு கனிந்த கொய்யாப் பழத்தை இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். குடலின் செரிமான சக்தி அதிகரிக்கும்.
- இரத்தச்சோகை மாற :
- இரத்தத்தில் இரும்புச் சத்துக் குறைவதால் இரத்தச்சோகை உண்டாகிறது. இன்று இந்தியக் குழந்தைகளில் அதுவும் பெண் குழந்தைகளில் 63.8 சதவீதம் குழந்தைகள் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இக்குறையை பழங்களும் கீரைகளும் நிவர்த்தி செய்யும். இதில் குறிப்பாக கொய்யாப்பழம் இரத்தச் சோகையை மாற்றும் தன்மை கொண்டது.
- இதயப் படபடப்பு நீங்க :
- ஒரு சிலருக்கு சிறிது வேலை செய்தால் கூட இதயப் படபடப்பு உண்டாகிவிடும். உடலில் வியர்வை அதிகம் தோன்றும். இது இதய நோயின் அறிகுறியாகக்கூட அமையலாம். இந்த படபடப்பைக் குறைக்க கொய்யாப்பழம் மிகவும் உகந்தது. இதய படபடப்பு உள்ளவர்கள் தினம் ஒரு கொய்யாப்பழம் உண்பது நல்லது.
- குழந்தைகளின் வளர்ச்சிக்கு :
- குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் சி சத்து கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு அளவோடு கொய்யாப் பழத்தைக் கொடுத்து வந்தால் குழந்தைகளின் எலும்புகள் பலப்படும். பற்கள் பலமடையும். நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.
குழந்தைகளுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும்
- குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் சி சத்து கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு அளவோடு கொய்யாப் பழத்தைக் கொடுத்து வந்தால் குழந்தைகளின் எலும்புகள் பலப்படும். பற்கள் பலமடையும். நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.
- தோல் நோய் நீங்க :
- சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொய்யாவுக்கு உண்டு.
நரம்புகளைப் பலப்படுத்தும். உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும்.
- சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொய்யாவுக்கு உண்டு.
- அதிக இரத்த அழுத்தம், அதிக கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. தினமும் இரண்டு கொய்யாப்பழம் உண்டு வந்தால் அஈஃ எனப்படும் கொலஸ்டிரால் குறையும் என இந்திய இருதய ஆராய்ச்சி நிறுவனம் (Heart researd Laboratary of India) ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளது.
சிலருக்கு வயிறு வலி வரலாம், அவர்கள் கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடகூடாது. அதிகம் சாப்பிட்டால் பித்தம் வருவதற்கும் வாய்ப்பு உண்டு. மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால், மருந்து முறிவதற்கு வாய்ப்புண்டு.
நன்றி.
0 comments:
கருத்துரையிடுக
Comment please to improve our blog. You no need to register. Just enter name by the option.
உங்களுடைய கருத்துக்கள் எங்களை மேன்மைபடுத்தும். உங்களை பற்றிய விவரங்களை ஏதும் கொடுக்க வேண்டியதில்லை.