Admin Control Panel

New Post | Settings | Change Layout | Edit HTML | Moderate Comments | Sign Out

24.8.11

ஆடாதோடை - Adhatoda zeylanica


 ஆடாதோடை - ஆடாதொடை
ஹிந்தி : Adusa
சமஸ்க்ரிதம் : Vasaka
ஆங்கிலம் : Adhatoda zeylanica

ஆடாதோடை



அறிமுகம் :

இது சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் காணப்படும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும்.  வெயிலிலும் பசுமை மாறாத கரும்பச்சை நிறமான ஈட்டி போன்ற இலைகள், புதர் போன்ற செடி அமைப்பு, நுனியில் வெள்ளையாக உள்ள கொத்தான பூக்களைக் கொண்டு எளிதில் இனம் காணும்படியான தோற்றத்தில் இது இருக்கும்.

Adhatoda Flower Closeup

நுனியில் கொத்தான இலைகளைப் போன்ற அமைப்புடைய பூவடிச்செதில்களில் பூக்கள் பூக்கும். பழங்கள், 4 விதைகளுடன் காணப்படும். விதைகள் உலர்ந்து வெடிக்கும் வகையைச் சார்ந்தவை.
இலையில் இருக்கு ஒருவித கசப்பு சுவை காரணமாக கால்நடைகள் கூட ஆடாதோடை இலைகளைச் சாப்பிடுவதில்லை. ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என மருவி பெயர் பெற்றுள்ளது.
 Goat No
 கிளைகளை வெட்டி நட்டாலே முளைத்துக் கொள்ளும் தன்மையை ஆடாதோடை கொண்டுள்ளது. கபக்கொல்லி, சளிக்கொல்லி என்ற வழக்கு பெயர்களும் ஆடாதோடைக்கு உண்டு. ஆடாதோடை அதிகளவு கரியமில வாயுவை உள்வாங்கி, பிராண வாயுவை வெளியிடுகிறது.  இது அதிகளவு ஆக்ஸிஜனை வெளியிடுவதால் இதனை ஆயுள் மூலிகை என்றும் அழைக்கின்றனர். இலை, பூ, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவப் பயனுடையவை..

Adhatoda leaves

முக்கிய வேதிப்பொருள்கள் :

இதில் வாசிசின், வசாக்கின், வாசினால், வாசினோன், ஆடாதோடின், வைட்டமின் சி கேலக்டோஸ் போன்றவை உள்ளன. இந்த வாசிசின் என்னும் அல்கலாய்டு நுரையீரல் செல்களில் வேலை செய்து அதை விரிவடைய செய்வதால் இது ஆஸ்த்மா, நாட்பட்ட இருமல், சளி போன்ற நோய்களை தீர்ப்பதில் இந்த மூலிகை முக்கிய பங்கு வகிக்கின்றது.

மருத்துவ பயன்கள் :

Lung
சளி, இருமல் :

  • சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு மருந்தாகும்.
  • இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க
    ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும்.
  • இவைகளுடன் திப்பிலி, ஏலம், அதிமதுரம், தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க இருமல், இளைப்பு, சுரம் தீரும்.
Lung Adhatoda

  • இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு(ஆஸ்த்துமா) தீரும்.
  • இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக்
    கொடுக்க இருமல் தீரும்.
  • இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.

இரத்தக்கொதிப்பு :
  • ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக்கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும்
Heart

ஆடாதோடை வேரையும், கண்டங்கத்திரி வேரையும் இடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக மாற்றி அதனுடன் திப்பிலி பொடி சேர்த்து அருந்தி வந்தால் வறட்டு இருமல் மற்றும்  தொண்டைப் புகைச்சல் குணமாகும்

Adhatoda Small

ஆடாதோடை இலை – 2,  வெற்றிலை – 2,  மிளகு – 5, சுக்கு – 1 துண்டு சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல்வலி, நெஞ்சுச் சளி நீங்கும்

சைனஸ் :
Sinus

சைனஸ், ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்து.

கழுத்து வலி :
Body pain

கழுத்து வலி, கை, கால் மூட்டு வலி, தோள்பட்டை வலி இவைகளுக்கு ஆடாதோடை காய்ந்த இலையுடன்  வசம்பு, மஞ்சள், சுக்கு இவைகளை சம அளவு எடுத்து இடித்து அதனுடன் தவிடு சேர்த்து துணியில் பொட்டலமாகக்  கட்டி சட்டியில் வைத்து சூடாக்கி வலி உள்ள இடங்களில் ஒற்றடம் கொடுத்தால் வலிகள் நீங்கும்

குரல் வளம்
Good throat

ஆடாதோடை இலையும் ஐந்து குறுமிளகும் சாப்பிட்டால் ஆடாத உடலும் ஆடும், பாடாத குரலும் பாடும் என்ற ஒரு பழமொழியுண்டு. ஆடாதோடை இலையைக் குடிநீர் செய்தோ, அல்லது பொடி செய்து தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் நல்ல குரல் வளம் கிடைக்கும்

மற்ற பயன்கள் :

  • இலைகளிலிருந்து மஞ்சள் நிறமான சாயம் தயாரிக்கப்படுகிறது
     Adhatoda leaf dry

  • இலைகளிலுள்ள சிலவகை காரச் சத்துக்களால் இவை பூச்சிகளாலோ, காளான்களாலோ பாதிக்கப்படுவதில்லை. இந்தப் பண்பின் காரணமாக பழங்களை சேகரித்துப் பாதுகாக்க இலைகள் பயன்படுகின்றன
  • தரிசு நிலங்கள் மேம்பட ஆடாதோடைச் செடிகளை நட்டு வளர்க்கலாம்.
     Heart Liver Lung
ஆகவே ஆடாதோடை என்பது இருதயம், இரைப்பை, நுரையீரல் இவைகளில் கபத்தினாலும், வாதத்தினாலும், பித்தத்தினாலும் ஏற்படும் கோளாறுகளைக் குணப்படுத்தும் ஓர் அற்புத மூலிகையாகும்

நன்றி.

22.8.11

கொய்யாப்பழம்

gauvafruit small 
கொய்யாப்பழம்:
 
 
அறிமுகம்
நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யப்பழமும் ஒன்று. கொய்யா பச்சைப்பசேலென்ற நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும். கொய்யா அனைவருக்கும் பிடிக்கும். இதற்கு ஜாம்பலா, கோவா(Gauva), பலாம்பர் என்ற பெயர்களும் உண்டு
கொய்யா மரங்கள் சுமார் 33 அடி உயரம் வரை வளரும் மரங்களாகும் கொய்யாவின் பச்சைப் பசேலென்ற இலைகள் நறுமணத்துடன் காணப்படும். விதையில்லாத கொய்யாப் பழங்களும் உள்ளன உஷ்ணப் பிரதேசங்களில் அதிகமாக விளையும் கொய்யாப்பழங்கள் நல்ல நறுமணம் மற்றும் இனிப்புச் சுவையுடன் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது.
  yelgauva
சத்துகள்
ஆரஞ்சை விட அதிக அளவில் வைட்டமின் `சி' உள்ள பழம் கொய்யா. இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி ஆகிய சத்துக்களும் அதிகமாக காணப்படுகின்றன. வாழைப்பழத்தில் உள்ளதை விட கூடுதலாக பொட்டாசியம் சத்தும் உள்ளது.
பீட்டா கரோட்டின்(beta carotene), லைகோபீன்(lycopene - இளஞ்சிவப்பு பகுதி,  புற ஊதா கதிர்களால் தோல் சேதம் ஏற்படுவதை தடுக்கிறது), லுடீன்(lutein) மற்றும் கிரிப்டாக்சாந்தின்(cryptoxanthin), வைட்டமின் A போன்ற antioxidant  சத்துகள் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
ygauva

கலோரி அளவு 
Common Guava, per 165 g of individual fruit portion
Calories
112
Moisture
133 g
Dietary Fiber
8.9 g (36%)
Protein
4.2 g (8%)
Fat
1.6 g (2%)
Ash
2.3 g
Carbohydrates
23.6 g (8%)
Calcium
30 mg (3%)
Phosphorus
66 mg (7%)
Iron
0.4 mg (2%)
Potassium
688 mg (20%)
Copper
0.4 mg (19%)
Beta-carotene (Vitamin A)
1030 IU (21%)
Ascorbic acid (Vitamin C)
377 mg (628%)
Thiamin (Vitamin B1)
0.1 mg (7%)
Riboflavin (Vitamin B2)
0.1 mg (4%)
Niacin (Vitamin B3)
1.8 mg (9%)
Folic acid
81 mcg (20%)



கொய்யாப்பழங்களின் மருத்துவ குணங்கள் :
  leafgauva
  • புண் ஆற்ற

    • கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் .
     
    • வயிறு நோய் நீங்க :
       
      • கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை, மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன குடல், வயிறு அல்சர், பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.
       
      • சர்க்கரை நோய் கட்டுபடுத்த :
         
        • கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
         
          gauvafruit
        • இருமலுக்கு :
           
          • கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன.
          • காய்ச்சல் கட்டுபடுத்த :  
            • கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
          gauvagroup
          • பல்வலி நீங்க :  
            • மருத்துவ குணமுடைய இப்பழத்தின் இலைகளை வாயில் வைத்து மென்றால் பல்வலி ஓரளவுக்கு குறையும்
            • வலிப்பு நீக்க :  

              • கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு,காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.

            redgauva

            • பிரசவ நச்சு அகற்ற : 

              • கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
               
              • மலச்சிக்கல் தீர :
                 
                • மலச்சிக்கல்தான் நோயின் ஆரம்பம்.  அனைத்து நோய்களின் தாக்கமும் மலச்சிக்கலில் இருந்துதான் ஆரம்பிக்கும்.  மலச்சிக்கலைப் போக்கினாலே நோயில்லா நல்வாழ்வு வாழலாம் என்பது சித்தர்களின் கூற்று.  நன்கு கனிந்த கொய்யாப் பழத்தை இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.  குடலின் செரிமான சக்தி அதிகரிக்கும்.
                  • இன்றைய உணவுகளில் அதிகம் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் அவை அஜீரணத்தை உண்டாக்கி வயிற்றுப் புண்ணை ஏற்படுத்துகிறது.  இதனைப் போக்க உணவுக்குப்பின் கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது.  மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் இப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் மூலநோயிலிருந்து விடுபடலாம்.


                    gauvajuice 
                • கல்லீரல் பலப்பட : 
                  •   உடலின் சேமிப்புக் கிடங்கான கல்லீரல் பாதிக்கப்பட்டால், உடலின் பித்தத்தின் தன்மை மாறுபடும்.  இதனால் உடல் பல பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும்.  இதைத் தவிர்த்து கல்லீரலைப் பலப்படுத்த கொய்யாப்பழத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.

                      gauvacake

                  • இரத்தச்சோகை மாற : 
                     
                    • இரத்தத்தில் இரும்புச் சத்துக் குறைவதால் இரத்தச்சோகை உண்டாகிறது.  இன்று இந்தியக் குழந்தைகளில் அதுவும் பெண் குழந்தைகளில் 63.8 சதவீதம் குழந்தைகள் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.  இக்குறையை பழங்களும் கீரைகளும் நிவர்த்தி செய்யும்.   இதில் குறிப்பாக கொய்யாப்பழம் இரத்தச் சோகையை மாற்றும் தன்மை கொண்டது. 
                  gauvaclean

                  • இதயப் படபடப்பு நீங்க : 
                     
                    • ஒரு சிலருக்கு சிறிது வேலை செய்தால் கூட இதயப் படபடப்பு உண்டாகிவிடும்.  உடலில் வியர்வை அதிகம் தோன்றும்.  இது இதய நோயின் அறிகுறியாகக்கூட அமையலாம்.  இந்த படபடப்பைக் குறைக்க கொய்யாப்பழம் மிகவும் உகந்தது.  இதய படபடப்பு உள்ளவர்கள் தினம் ஒரு கொய்யாப்பழம் உண்பது நல்லது.

                    freahgauva

                  • குழந்தைகளின் வளர்ச்சிக்கு : 
                     
                    • குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் சி சத்து கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது.  குழந்தைகளுக்கு அளவோடு கொய்யாப் பழத்தைக் கொடுத்து வந்தால் குழந்தைகளின் எலும்புகள் பலப்படும்.  பற்கள் பலமடையும்.  நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.
                      குழந்தைகளுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும்
                  gauvadouble
                  • தோல் நோய் நீங்க :
                     
                    • சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொய்யாவுக்கு உண்டு.
                      நரம்புகளைப் பலப்படுத்தும்.  உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும்.
                  gauvaflower
                  • கொழுப்பைக் குறைக்க :

                    • அதிக இரத்த அழுத்தம், அதிக கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு.  தினமும் இரண்டு கொய்யாப்பழம்  உண்டு வந்தால்   அஈஃ எனப்படும் கொலஸ்டிரால் குறையும் என இந்திய இருதய ஆராய்ச்சி நிறுவனம் (Heart researd Laboratary of India) ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளது.
                    ilvgauva குறிப்பு:
                    சிலருக்கு வயிறு வலி வரலாம், அவர்கள் கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடகூடாது. அதிகம் சாப்பிட்டால் பித்தம் வருவதற்கும் வாய்ப்பு உண்டு. மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால், மருந்து முறிவதற்கு வாய்ப்புண்டு.
                    நன்றி.

                    21.8.11

                    நகைசுவை விருந்து




                    பகுதிகள் :



                    மொக்கைகள்  




                    வாத்தியார்: ஏன்டா 15 நாளா பள்ளிக்கு வரலே?
                    மாணவன்: எங்க அப்பா ஒரே இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதை இருக்காதுன்னு சொல்லிருக்காரு சார். 





                    கணவன்: "நம்ம கஷ்டம் தீர சாமி எப்போதான் கண்ண திறப்பரோ?"
                    (வேலைக்கு போகாத கணவனிடம்...)
                    மனைவி: "கவலையே படாதிங்க ஒரு நாளைக்கு மூணாவது கண்ண திறக்கத்தான் போறாரு" 





                    "டாக்டர் என்னால வாய திறக்க முடியல.."
                    "சரி சரி உங்க மனைவிய வெளியில நிக்க சொல்லறேன்"





                    "எதுக்கு டாக்டர் மூச்ச இழுத்து விட சொல்றீங்க ?"
                    "இல்ல ஆபரேஷனுக்கு பிறகு மூச்சு விட முடியாது.."





                    "அந்த நோயாளிக்கு சொந்தகாரங்க யாரும் இல்லையா?"
                    "ஆமா டாக்டர் எல்லோருக்கும் நீங்க தான் ஆப்ரேஷன் பண்ணீங்க"

                     


                    "உங்களுக்கு தலைவலி இருக்கா?"
                    "தலைவலி வெளியில நிக்குது டாக்டர்"





                    "டாக்டர் என் புருஷன் ராத்திரி தூக்கத்துல பேசுறாரு"
                    "நீங்க அவர பகல்ல பேச விடுங்க சரியாயிடும்"



                    ஸ்கூல் டெஸ்ட்ல பிட்  அடிக்கலாம் , காலேஜ்ல டெஸ்ட்ல பிட்  அடிக்கலாம் , ப்ளட் டெஸ்ட்ல  பிட்  அடிக்க  முடியுமா?  


                    பல் வலி வந்தா பல்ல புடுங்கலாம் ஆனா, கால் வலி வந்தா கால புடுங்க முடியுமா ?



                    லஞ்ச் பேக்ல லஞ்ச் கொண்டு போக முடியும் ஆனா ஸ்கூல் பேக்ல ஸ்கூல கொண்டு போக முடியுமா ?


                    நோயாளி: ஏன் நான் மருத்துவமனையில் இருக்கேன் ?
                    டாக்டர்: உங்களுக்கு ஒரு பஸ்சால விபத்து நடந்துருச்சி .
                    நோயாளி: அப்படியா ?
                    டாக்டர்: சரி, உங்களுக்கு ஒரு நல்ல மற்றும் ஒரு கெட்ட செய்தி இருக்கு. உங்களுக்கு முதல எதை சொல்லணும் ?
                    நோயாளி: முதல்ல கெட்ட செய்தி சொல்லுங்க .
                    டாக்டர்: உங்கள் கால்கள் மிகவும் மோசமாக இருக்கு, அதனால உங்க இரண்டு காலையும் எடுக்கணும்.
                    நோயாளி: அது பயங்கரமான செய்திதான் ! சரி நல்ல செய்தி என்ன?
                    டாக்டர்: எங்க ஆஸ்பத்ரில ஒரு கால் முழுசா எடுத்தீங்கனா, அடுத்த கால எடுக்க பாதி கட்டணந்தான்..



                    நோயாளி: டாக்டர் எனக்கு இரண்டு நாளா ஜலதோசமா இருக்கு.
                    டாக்டர்: சரி இரண்டு நாளைக்கு வீட்ல மூணு வேள நல்ல குளிர்ந்த தண்ணில குளிச்சிட்டு வாங்க.
                    நோயாளி: என்ன சொல்றீங்க ? அப்புறம் எனக்கு குளிர் காய்ச்சல் வந்துருமே!
                    டாக்டர்: பரவாஇல்ல.. எனக்கு ஜலதோசத்த விட குளிர் காய்ச்சல் எப்படி போக்கனுன்னும் தெரியும்.


                    "டாக்டர் நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் !!" "பரவாஇல்ல என்னன்னு சொல்லுங்க" "டாக்டர் இது உங்க கிளினிக்னு தெரியாம வந்துட்டேன்"




                    படங்கள்:

                    Snoar

                    Doctor Operation

                    rajaheart attack

                    Bill





                    18+ மட்டும்

                    Lorry Viagra

                    Viagra Throat

                    Viagra

                    Viagra Dog

                    Viagra Play

                    19.8.11

                    முகப்பு


                    காய்கறி - 3
                    Vege

                     பழங்கள்  - 2

                    Fruits
                    அசைவம் - 2

                    Non Veg
                    முலிகை - 3

                    Herbs
                    ஆரோக்கிய பானங்கள் - 1

                    Juice and Soup
                    சமையல்  - 0

                    Receipe
                    ஆரோக்ய குறிப்புகள் - 5

                    Health Tips
                    நகைச்சுவை துணுக்குகள்  - 3

                    Health Jokes
                    சில உண்மைகள் - 1

                    True or Fictions
                    உடற்பயற்சி  - 1

                    Excercise
                    வானொலி - 0

                    Madras F.M
                    காணொளி - 4

                    You Tube