Admin Control Panel

New Post | Settings | Change Layout | Edit HTML | Moderate Comments | Sign Out

30.8.11

உருளைக் கிழங்கு–Potato

 

உருளைக் கிழங்கு - Potato

 

Potato Head

 

 

[மேலே]

 

Potato Blue Swede

 

 

அறிமுகம்

அவித்தோ, பொறித்தோ, மசித்தோ மிக எளிதாக சமைத்து உண்ணக்கூடிய காய் என்றால் அது உருளைக்கிழங்கு. இது உலகின் அணைத்து தரப்பு மக்களாலும்  விரும்பி உண்ணப்படும் நம்பர் 1 காய்.

தென்அமெரிக்க கண்டத்திலிருந்து மற்ற நாடுகளுக்கு பரவியது உருளைக்கிழங்கு. நமது நாட்டில் குளிர் பிரதேசங்களில் இது பயிரிடப்படுகிறது. உருளைக்கிழங்கில் உடலிற்கு வெப்பம் தரும் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து அதிகம் உள்ளது.

Fingerling Potato

உருளைக்கிழங்கு 5,000 வகைகள் உள்ளன என்றாலும், மஞ்சள், சுற்று வெள்ளை, நீண்ட வெள்ளை, சிவப்பு, russet, நீலம், ஊதா மற்றும் fingerling போன்றவை மட்டும் ஒரு சில வகைகள், பொதுவாக சமையல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.

Russet Potato

உருளைக்கிழங்கின் தோலின் அடியில் இரும்புச்சத்து உண்டு. எனவே இதனை தோலுடன் வேகவைத்து பிறகுதான் தோலை உரிக்க வேண்டும். உடல் எடை கூடும். வாயுவை உண்டாக்கும் கிழங்கு இது. ஆகவே, இஞ்சி, புதினா, எலுமிச்சம் போன்ற ஏதாவது ஒன்றைச் சேர்த்துச் சமைப்பது நல்லது.

உருளைக்கிழக்கு ஏராளமான சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதிக சத்துள்ளதும் எளிதில் சமைக்கக்கூடியதுமாகிய உருளைக்கிழங்கில் குறைந்த அளவு கலோரிகள் கிடைக்கின்றன.

Potato Skin Dish

 

[மேலே]

சத்துகள்

எளிதில் ஜீரணமாகக்கூடிய இந்த காய்கறியில் வைட்டமின்கள் (C, B6, B1, B2, B3),  தாதுஉப்புகள்(Phosphorous, Magnesium, Chromium, Potasium, Sodium, Clacium) அதிகம் காணப்படுகின்றன. இந்த காய் அதிக நார்ச்சத்தும் கொண்டுள்ளது. வழைப்பழத்தில் உள்ளதைப்போன்ற அதிக பொட்டாசியம் சத்து உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது.

Nutrient

Without skin (156 g) (% RDA)

With skin (173 g) (% RDA)

Vitamin C

33

28

Thiamin

11

7

Niacin

11

12

Vitamin B6

23

27

Folate

4

12

Pantothenic Acid

9

7

Iron

3

10

Magnesium

10

12

Potassium

17

26

Copper

17

10

Dietary Fiber

9

15

எல்லா உணவு வகைகளில் உள்ளதைவிட இதில் காரப்பொருள்(Alkaline) அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது. இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது

யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றிவிடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.

 

[மேலே]

 

உருளைக்கிழங்கு வைத்தியம்


தினசரி உணவில் உருளைக்கிழங்கை அவித்தோ, வேகவைத்தோ, பொரித்தோ, சூப்வைத்தோ சேர்த்துக்கொள்வதுதான் உருளைக் கிழங்கு வைத்தியம்.

Potato Clean

 

பச்சை உருளைக்கிழங்கு

வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும். இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளை பச்சயைாக மிக்ஸிசியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்குமுன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்தினால் இரைப்பைக் கோளறுகள் குணமடையும்.

 

[மேலே]

 

Potato Oven Baked

சொறி, கரப்பான்

 

ஊட்டச்த்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் போதும். அவித்த உருளைக்கிழங்குகளை தோலுடன் மசித்துத் தினமும் ஒருவேளை வீதம் ஒரு வாரம் முதல் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்

 

Potato Flower

[மேலே]

 

வாத நோய் குணமாகும்!

இரு பச்சையான உருளைக்கிழங்குகளைத் தோலுடன் மிக்ஸியில் அரைத்துச் சிறிது தண்ணீர்விட்டு, இரு தேக்கரண்டி வீதம், உணவு சாப்பிடுவதற்கு முன்பு, அருந்த வேண்டும். இப்படி அருந்திய சாறு உடலில் வாதநோயைத் தோற்றுவிக்கும் அமிலத்தை வெளியேற்றிவிடுகிறது. தொடர்ந்து உட்கொண்டால் வாதநோய் முற்றிலும் குணமாகும்.

அவித்த உருளைக்கிழங்குகளின் தோல்களைச் சேகரித்து, சுத்தம் செய்து, ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். பிறகு, இந்தக் கஷாயத்தை அருந்தினாலும் கீல் வாதம் குணமாகும். இந்த முறையில் தினமும் மும்முறை தயாரித்து அருந்த வேண்டும்.

 

Potato Whole plant

[மேலே]

 

தசை வீக்கம்

உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது. உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க நிவாரணம் கிடைக்கும்.

[மேலே]

 

வீக்கம், வலி

உருளைக்கிழங்கு சாற்றை அடுப்பில் வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றச் செய்து அதில் கிளிசரின் சேர்த்து, பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும். வீக்கம், வலி ஆகியன உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்ற மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தைலத்தை அழுத்தித் தேய்த்தால் ஒரே நாளில் வீக்கம் குறையும்; வலியும் நீங்கும்.

Potato Salad

[மேலே]

 

மலச்சிக்கல்

 

சோறு, சப்பாத்தி போன்றவற்றைக் குறைத்துக்கொண்டு உருளைக்கிழங்குடன் கீரைவகைகளை, குறிப்பாக லெட்டூஸ், பசலைக்கீரை, தக்காளி, செலரி, வெள்ளரிக்காய், பிட்ரூட் கிழங்கு, டர்னிப்கிழங்கு போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும். இதன்மூலம் தோலில் உள்ள அழுக்குகளும், சுருக்கங்களும் நீங்கிவிடும். மலச்சிக்கலும் அகன்று இரத்தம் சுத்தம் செய்யப்பட்டுவிடும்.

Puri Potato

 

[மேலே]

 

தீ காயங்கள்

உருளைக்கிழங்கு உள்ள பொட்டாசியம் மற்றும் வைட்டமின் B6 வீக்கத்து எதிராக மிகவும் பயனுள்ளதாக வேலை செய்கிறது. பச்சை உருளையை நசுக்கி தீ காயங்களில் இட்டால், தீ காயங்கள் வலி நீங்கி வெகு விரைவாக குணமாகும்.

 

[மேலே]

Potato bleech 

இயற்கை பிளீச்சிங்


இரவு தூங்கப்போகும் முன்னர் பச்சை உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு உறங்கினால் அதிகாலை எழும் போது முகம் புத்துணர்வுடன் காணப்படும். அமெரிக்காவில் இந்த முறையில் இயற்கையாக முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கங்களை நீக்கிக்கொள்கின்றனர்.

 

[மேலே]

 

Potato Mutton Curry 

அசைவத்திற்கு

ஆட்டுக்கறியுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைக்கக் காரணம் என்ன? உருளைக் கிழங்கு எளிதில் ஜீரணமாகி உணவுப்பாதையில் எந்தவிதமான சிரமும் இன்றி ஆட்டுக்கறி செல்ல பயன்படுகிறது. எனவே ஆட்டுக்கறி செரிமானம் ஆக உருளைக்கிழங்கு பயன்படுகிறது.

 

 

[மேலே]

Potato Cubid 

பாலுணர்வை தூண்டும்


இது வி.டி. நோய்க்காரர்களுக்கு எரிச்சலைக்கொடுக்கும். உருளைக்கிழங்கு மெலிந்தவர்களை சதைப்பிடிப்புடன் உருவாக்கும். எனவே, வி.டி. நோயினால் துன்பப்படுபவர்களும், கொழுத்த சரீரம் உள்ளவர்களும் உருளைக் கிழங்கைச் சாப்பிடாமல் இருந்தால் நலம்.

Heart Potato

எனவே, உடல் கொழுத்த மனிதர்கள் எண்ணெயில் பொரித்த உருளைக்கிழங்கு வறுவலை முற்றிலும் தவிர்த்து, மாதம் ஒரு முறை அவித்த உருளைக்கிழங்கை அளவுடன் சாப்பிட வேண்டும்.

 

Toxic Potato fruits produced by mature potato plants

(ஆசைக்காக) வி.டி. நோய்க்காரர்கள, வியாதி குணமான பிறகு உருளைக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மற்றவர்கள் ஆரோக்கிய உணவாகத் திகழும் உருளைக் கிழங்கை அடிக்கடி சாப்பிட்டு உடல் நலத்தைப் புதுப்பிக்க இன்றே முடிவு செய்யுங்கள்.

 

Green Potato

குறிப்பு.

உருளையில் பச்சை நிறமாக காணப்பட்டால் அது glycoalkaloid  என்ற விஷமாகும். இதனை உண்பதால் நமக்கு மிக ஆபத்தாக முடியலாம். முளை விட்ட உருளைகளையும் நாம் தவிர்ப்பது நல்லது.

 

[மேலே]

நன்றி.

தொடர்புடைய பதிவுகள் :



Print

1 comments:

பெயரில்லா சொன்னது… [Reply to comment]

Harrah's Casino Site | LiveScore | LiveScore
Harrah's Casino. 777 Harrah's Blvd., Atlantic City, luckyclub NJ 08401, United States. Phone: (609) 414-5000. Website: http://www.caesars.com/. Casino Type: Live. Baccarat.

கருத்துரையிடுக

Comment please to improve our blog. You no need to register. Just enter name by the option.
உங்களுடைய கருத்துக்கள் எங்களை மேன்மைபடுத்தும். உங்களை பற்றிய விவரங்களை ஏதும் கொடுக்க வேண்டியதில்லை.