Admin Control Panel

New Post | Settings | Change Layout | Edit HTML | Moderate Comments | Sign Out

7.9.11

பூக்களின் பயன்கள்–Flowers Health Benefits–Part 1

 

பூக்களின் பயன்கள் – Flowers Benefits

 

Flowers

பாகம் - 1

பாகம் – 2 

Flower

[மேலே]

 

 

 

 

புன்னைப்பூ – Mastwood, Indian Laurel

புன்னைப்பூ

கரப்பான்,சொறி,சிறங்கு, பால்வினைநோய் ஆகியவை நீங்கும். ஆனால், பித்த மயக்கம் ஏற்படும். விதை விஷத்தன்மை உள்ளது

 

இலுப்பைப் பூ - Madhuca Indica (Mahua)

Mahua - Izhupai Flowerஇலுப்பை பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருதி ஏற்படும். மேலும் தாகத்தையும் இது விரட்டியடிக்கும்.

[மேலே]

 


ஆவாரம் பூ - Tanner’s cassia

Avaram Flowerரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கசாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.


 

அகத்திப்பூ - Hummingbird tree/Scarlet wisteria - Sesbania grandiflora

Sesbania grandiflora - அகத்திப்பூஅகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.

[மேலே]


 

நெல்லிப்பூ – Phyllanthus Emblica – Aamla

நெல்லிப்பூஉடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கசாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது.

 

களாப்பூ – Corinda Flower

களாப்பூகண்களைத் தாக்கும் கரும்படலம், வெண்படலம்,ரத்தப் படலம்,சதைபடலம் போன்ற கண் நோய்களை அகற்றும்.

[மேலே]

 

சண்பகப்பூ – Champak Flower

Champak Flower - சண்பகப்பூ

வாத பித்த நோய், எலும்பு காய்ச்சல், பால்வினை நோய், விந்துவிரையம் ஆகியவை தீரும். வாசனை மனமகிழ்ச்சியினை உண்டாக்கும்.இந்தப் பூக்களை நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி, நீங்கும்


 

மகிழம்பூ - Mimusops Elengi

மகிழம்பூமகிழம்பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலைப்பாரம் போன்ற நோய்கள் நீக்கிவிடும்.

[மேலே]

 

தாழம்பூ - Fragrant Screw Pine flower

Fragrant Screw Pine - தாழம்பூஇந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும்.

 

பாதிரிப்பூ - Yellow Flower Trumpet Tree

Yellow Flower Trumpet Tree - பாதிரிப்பூ

பித்த சுரம் நீங்கும்.வெள்ளை போக்கு நிற்கும்.

 [மேலே]

 

செம்பருத்திப்பூ – Hibiscus

செம்பருத்திப்பூ
இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.

  • செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.
  • வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணமாக்கும். (பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.)

Hibiscus

  • கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. (செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.)
  • மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும். (செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலையிடி, மயக்கம் போன்றவை குறையும்.)

Hibiscus Violet

  • வெள்ளைப்படுதலைக் குணமாக்கும். (செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.)

[மேலே]

 

அலரிப்பூ(கஸ்தூரிப் பட்டை) - Oleander

அலரிப்பூ
பித்தம்,உடற்சூடு,சொறிசிரங்கு, புண் இரத்தம், தலையில் நமைச்சல் ஆகியவை நீங்கும்.


 

ரோஜாப்பூ – Rose Flower

Rose Flower
இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.

 

 

வெங்காயப் பூ – Onion Flower

வெங்காயப்பூ - Onion Flower

இதைச் சமைத்துச் சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கும்.

 

 

flr

 

பாகம் – 2 

[மேலே]

 

நன்றி.

தொடர்புடைய பதிவுகள் :



Print

3 comments:

பெயரில்லா சொன்னது… [Reply to comment]

rompa nallarukku

Updatenews360 சொன்னது… [Reply to comment]

thanks for sharing good info.

Updatenews360 சொன்னது… [Reply to comment]

to read health info, just click this https://www.updatenews360.com/category/health/

கருத்துரையிடுக

Comment please to improve our blog. You no need to register. Just enter name by the option.
உங்களுடைய கருத்துக்கள் எங்களை மேன்மைபடுத்தும். உங்களை பற்றிய விவரங்களை ஏதும் கொடுக்க வேண்டியதில்லை.